பட்டாசு வேண்டாம்.. தொண்டர்களிடம் சிரஞ்சீவி

இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவரும் நடிகருமான சிரஞ்சீவி,
ஆந்திராவில் வெள்ளத்தால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். விவசாயிகள் கடுமையான நஷ்டத்திற்கு ஆகாகியுள்ளனர்.
இதனால் பிரஜா ராஜ்ஜியம் கட்சி தொண்டர்களும் எனது ரசிகர்களும் இந்த தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு புறம் மக்கள் பேரழிவால் கஷ்டப்படும் போது நாம் மட்டும் தீபாவளியை எப்படி மகிழ்ச்சியாக கொண்டாட முடியும்?.
தொண்டர்களும் ரசிகர்களும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி தீபாவளியை கொண்டாடுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications