'ஜெயமானது' ரவியின் காதல்!

ரவியின் 'காதல்கள்' குறித்து அவ்வப்போது செய்திகள் வந்த வண்ணமிருந்தன. அதனை மறுத்தும், பத்திரிகைகளில் எதுவும் இடம்பெறாமலும் பார்த்துக் கொண்டார் அவரது தந்தை எடிட்டர் மோகன்.
சமீபத்தில் ரவிக்கும், இந்தி நடிகையும் தாம்தூமில் அவரது ஜோடியுமான கங்கனா ரனவத்துக்கும் காதல் என்று பெரும் பரபரப்பு கிளம்ப, அதை அடியோடு மறுத்தனர் ரவி குடும்பத்தினர்.
இனி அந்த வேலை மிச்சமாகிவிட்டது அவர்களுக்கு. ஜெயம் ரவிக்கு சீக்கிரமே கல்யாணாகப் போகிறது. அதுவும் காதல் கல்யாணம்.
மணமகள்?...
அவர் தீவிரமாகக் காதலித்த பெண்ணையே திருமணம் முடிக்கிறார். மணப்பெண் பெயர் ஆர்த்தி. வீராப்பு படத் தயாரிப்பாளர் விஜயகுமாரின் மகள்.
ஜெயம் ரவி இப்போது நடித்து கொண்டிருக்கும் பேராண்மை படம் முடிவடைந்ததும், அவருக்கும், ஆர்த்திக்கும் திருமணம் நடைபெறும் என்று எடிட்டர் மோகன் அறிவித்துள்ளார்.
மணமகள் ஆர்த்தி ஸ்காட்லாந்தில் பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்தவர். ஆர்த்தி- ரவி காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு கிளம்பினாலும், தனது பிடிவாதம் மற்றும் காதல் உறுதியால் வென்றுள்ளார் ரவி. இப்போது இரு வீட்டுப் பெற்றோர்கள் சம்மதத்துடன் இந்தக் காதல் திருமணம் நடக்கிறது.
நேற்றுதான் ஒரு பத்திரிகையில் ரவி தற்கொலை முயற்சி என அட்டைப் படக் கட்டுரையாக செய்தி வெளியாகியிருந்தது. ரவியின் இந்தப் பிடிவாதத்தைப் பார்த்த மோகன், காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி ஜெயம் ரவி காதலுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











