twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குசேலன்: தியேட்டர்கள் அதிபர்கள் மீண்டும் போர்க்கொடி!

    By Staff
    |

    Rajini
    மதுரை: குசேலன் படத்துக்கு தருவதாக கூறிய நஷ்டஈட்டை ஒரு வாரத்துக்குள் வழங்க வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் மீண்டும் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

    ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தை வாங்கி வெளியிட்ட தியேட்டர்காரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டஈடாக ரூ.15 கோடி கேட்னர். அவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்துப் பேசி, குறிப்பிட்ட தொகையை நஷ்ட ஈடாகத் தருவதாக கூறினார்.

    ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புகத் கொள்ளாததால் இந்தப் பிரச்சினையில் தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் படத்தை வெளியிட்ட பிரமிட் நிறுவனம், படத்தை தயாரித்த செவன் ஆர்ட்ஸ், ரஜினிகாந்த், தியேட்டர் அதிபர்கள் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

    அதன்படி படத்தை விற்பனை செய்த தொகையில் 35 சதவீதம் திரும்ப வழங்குவதாக ரஜினிகாந்த், மற்றும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தியேட்டர் உரிமையாளர்களும் இதனை ஏற்றனர்.

    ஆனால் உறுதியளித்தபடி அந்த நஷ்டஈட்டை இதுவரை முழுமையாக வழங்கவில்லை.

    இது தொடர்பாக மதுரையில் உள்ள வெற்றி தியேட்டரில் திரையரங்க உரிமையாளர்களின் கூட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் சங்கத் தலைவர் அண்ணாமலை பேசுகையில்,

    குசேலன் படத்துக்கு இழப்பீடாக பணம் தருவதாக கூறினார்கள். அதன்படி மதுரை, ராமநாதபுரம், நெல்லை, கன்னியாகுமரி, சேலம் பகுதி வினியோக உரிமையின் கீழ்வரும் தியேட்டர்களுக்கு பணம் வழங்கப்பட்டு விட்டது. ஆனால் கோவை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு உள்பட சில பகுதிகளில் உள்ள தியேட்டர்களுக்கு இதுவரை பணம் வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து கேட்டபோது பிரமிட் நிறுவனத்திடம் இருந்து பணம் வராததால் கொடுக்க முடியவில்லை என்று தயாரிப்பாளர் மற்றும் ரஜினிகாந்த் தரப்பில் கூறப்படுகிறது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது. நஷ்டஈட்டுப் பணத்தை ஒரு வார காலத்துக்குள் வழங்க வேண்டும்.

    இல்லாவிட்டால் தமிழக அளவில் எங்களது அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X