சஞ்சய்தத் மீது மான்யதா கணவர் வழக்கு!

சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத்தும், அவர் 2 வருடங்களாக காதலித்து வந்த மான்யதாவும் திருமணம் செய்து கொண்டனர். மான்யதா முஸ்லீம் பெண். இருப்பினும் இந்தக் கல்யாணம் இந்து முறைப்படி நடந்தது.
சஞ்சய் தத்துக்கு இது 3வது திருமணம். மான்யதா ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வருபவர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இந் நிலையில் மான்யதாவை தான் இன்னும் முறைப்படி விவாகரத்து செய்யவில்லை. அந்த நிலையில் அவரை சஞ்சய் தத் எப்படிக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார் மான்யதாவின் முதல் கணவரான மெஹ்ராஜ் ஷேக்.
இதுதொடர்பாக மும்பையில் உள்ள பந்த்ரா பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஷேக் தாக்கல் செய்துள்ள மனுவில், நானும் மான்யதாவும் கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது.
அதன் பின்னர் பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இஸ்லாமிய முறைப்படி எங்களில் யாரும் இதுவரை தலாக் செய்து கொள்ளவில்லை. எனவே இன்னும் எங்களது திருமணம் முறியவில்லை.
இந்த நிலையில் மான்யதாவை சஞ்சய் தத் திருமணம் செய்து கொண்டது செல்லாது. அவர்கள் இஸ்லாமிய சட்டத்தை மீறி நடந்து கொண்டுள்ளனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.


Click it and Unblock the Notifications











