கார்த்திக்கு நயனதாரா

By Staff

Nayanatara
லிங்குச்சாமி இயக்கவுள்ள புதிய படத்தில் 'பருத்தி வீரன்' கார்த்தியும், 'மோகினி' நயனதாராவும் ஜோடி சேரவுள்ளனர்.

தற்போது கார்த்தி செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல நயனாரா, விஜய்யுடன் வில்லு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இருவரும் தத்தமது படத்ைத முடித்து விட்டு அடுத்து லிங்குச்சாமியின் இயக்கத்தில் இணை சேரவுள்ளனர்.

இருவரும் இணைவது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே அண்ணன் சூர்யாவுடன் நயனதாரா கஜினி படத்தில் நடித்துள்ளார். தற்போது தம்பி கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து புதிய சாதனை படைக்கிறார். இதேபோல மாமனார் ரஜினியுடனும், மருமகன் தனுஷுடனும் இணைந்து நடித்த பெருமையும் நயனதாராவுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய திரையுலக வரலாற்றில் இப்படி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்து நடித்த நடிகை நயனதாராவாகத்தான் இருக்க முடியும்.

லிங்குச்சாமியின் புதிய படத்தை அவரது திருப்பதி மூவிஸ் தயாரிக்கிறது. இன்னும் படத்துக்குப் பெயரிடப்படவில்லை.

இப்படம் குறித்து லிங்குச்சாமி கூறுகையில், இது முழு நீள ஆக்ஷன் படம். அதேசமயம், மென்மையான காதலும் கதையில் இழையோடும். கிட்டத்தட்ட சண்டைக் கோழி படம் போல இது இருக்கும்.

இப்படத்தில் வித்தியாசமான கார்த்தியையும், நயனதாராவையும் ரசிகர்கள் காணலாம்.

முதலில் வேறு ஒரு ஹீரோவைத்தான் நான் நினைத்திருந்தேன். இருப்பினும் தற்போது கார்த்தி, இந்த கேரக்டரில் முழுமையாக பொருந்தி வந்துள்ளார்.

கார்த்தியும், நயனதாராவும் தற்போது பிசியாக உள்ளனர். ஜூலை மாதம் எனது படத்திற்கு அவர்கள் வருவார்கள் என்றார்.

லிங்குச்சாமியின் திருப்பதி மூவிஸ் தற்போது இரு படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X