ஆமிர் வீட்டு நாய் பெயர் ஷாருக்!

By Staff

Aamir Khan
பாலிவுட்டின் நம்பர்-2 இடத்துக்கு ஆமிர்கானுக்கும், ஷாருக்கானுக்கும் போட்டி நிலவுகிறது. இதில் ஆமிர்கான் சற்று தீவரமாகவே விரோத போக்கை கடைபிடிப்பதாகக் கூறப்படுகிறது. இதை ஷாருக்கான் பொருட்படுத்துவதில்லை. இந்நிலையில் இருவரின் திரைமறைவு போர் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.

ஆமிர்கான் தன் வீட்டில் வளரும் நாய்க்கு ஷாருக் என்று பெயர் வைத்துள்ளதாக தன்னுடைய இணையதள பக்கத்தில் (blog) ஆமீர்கான் தெரிவித்துள்ளார். ஷாருக்கான் எப்போதும் என்னுடைய காலடியில்தான் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஷாருக்கானின் ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.

இதுகுறித்து ஷாருக்கானிடம் கேட்டபோது, இதில் கோபப்பட ஒன்றுமில்லை. முன்பெல்லாம் பிரபலமானவர்களின் பெயரை குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்தனர். இப்போது சிலர் நாய்க்கு சூட்டி மகிழ்கின்றனர். அதேபோல தான் ஆமிர் வீட்டு நாய்க்கு ஷாருக்கான் என்று பெயர் வைத்திருப்பதும். இதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. தவறான எண்ணத்தில் ஆமிர் அதை ப்ளாக்கில் எழுதியிருக்க மாட்டார் என்று கேஷூவலாக கூறினார்.

இந்த 2 பெரிய ஸ்டார்களோடும் நடித்த நடிகர் ஒருவர் கூறுகையில், புகழ் போதையில் ஆமிர் இப்படி கூறியுள்ளார். முன்பு ஒருமுறை தன்னைத்தானே நம்பர்-1 என்று கூறிக்கொண்டவர்தான் ஆமிர். ஆனால் அதை சிரித்துக் கொண்டு சாதாரணமாக எடுத்துக் கொண்டார் ஷாருக். இதுபோன்ற விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் ஷாருக்குக்கு நல்லது. ப்ளாகுகளில் சுதந்திரமாக எழுதுவது என்ற பெயரில் நாவடக்கத்தை பலர் விட்டுவிடுகின்றனர். ஆனால் அமிதாப்பின் பிளாக்கில் அப்படி இல்லை என்றார்.

அமிதாப் நடித்த பிளாக் படம் குறித்து ஆமிர் விமர்சித்தது சர்ச்சைக்குள்ளானது. தற்போது ஷாருக்கான் பெயரை தன் வீட்டு நாய்க்கு வைத்திருப்பதன் மூலம் வீதியில் இறங்கி தரத்தை குறைத்துக் கொண்டுள்ளார் ஆமிர் என்கின்றனர் பலர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X