ஷாருக் கானுக்கு கருப்பு பெல்ட்!

Shahrukh Khan
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானுக்கு கொரிய அரசு டேக்வாண்டோவில் கெளரவ கருப்பு பெல்ட் அளித்துள்ளது.

டேக்வாண்டோவில், 5வது டிகிரி கருப்பு பெல்ட் ஷாருக் கானுக்கு அளிக்கப்படுகிறது. இத்தனைக்கும் டேக்வாண்டோவில் ஏபிசிடி கூட 'கிங்' கானுக்குத் தெரியாதாம்.

ஷாருக்கானுக்கு இந்தக் கெளரவத்தை அளிப்பது குறித்து கொரிய அரசு கூறுகையில், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பெரும்பாலும் ரொமான்டிக் படங்களில்தான் ஷாருக் கான் நடித்திருந்தாலும் கூட ஒரு டேக்வாண்டோ வீரருக்குரிய கம்பீரமும், நேர்மையும் அவரிடம் உள்ளது. இதனால்தான் இந்த கெளவர கருப்பு பெல்ட் அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஷாருக் கான் கூறுகையில், இந்த பெல்ட் கொடுத்ததால் மகிழ்ச்சி அடைந்து, வில்லன்களை அடித்து துவைத்து எடுக்கும் அதிரடி ஆக்ஷன் ரோல்களுக்கு மாறப் போவதில்லை. எல்லோருக்கும் பிடித்த சாக்லேட் பாய் ஆகவே தொடர்ந்து நீடிக்க விரும்புகிறேன்.

இப்போதுதான் எனது தோள்பட்டை வலியிலிருந்து குணமடைந்து வருகிறேன். இன்னும் 2 மாதம் ஃபிட் ஆக. முதலில் எனது இரு கைகளையும் சேர்த்து தூக்க பழக வேண்டும். பிறகுதான் மற்றதெல்லாம் என்றார்.

தொடர்ந்து அவர் அப்புறம் முக்கியமானது, எனது மகன் ஆர்யன் என் மீது மகா கோபமாக இருக்கிறான். அவன் மிகக் கடுமையாக டேக்வாண்டோ கற்று வருகிறான். இப்போது எனக்குக் கொடுத்திருக்கும் கருப்பு பெல்ட்டை அவன் நாங்க இன்னும் 2 வருடங்கள் ஆகுமாம். ஆனால் ஒன்றுமே செய்யாமல் நான் பெல்ட் வாங்கி விட்டதாக டென்ஷனாக இருக்கிறான் என்கிறார் ஷாருக்.

இருக்காதா பின்னே..!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X