சிலம்பாட்டம்: சிம்புவின் இந்தப் படத்துக்கும் வந்தது வம்பு!

திருச்சியை சேர்ந்த வினியோகஸ்தர் ராமமூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 1998 ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் தயாரித்த மோனிஷா என் மோனலிசா என்ற படத்திற்காக ரூ.59 லட்சம் அவருக்கு கடனாக கொடுத்து குறைந்தபட்ச உத்தரவாதம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டோம்.
அதன்படி 5 ஆண்டுகளுக்கு திருச்சியில் அப்படத்தை திரையிட்டு வருமானத்தை எடுத்து கொள்வதாக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் ஓடவில்லை. 25 லட்சம் மட்டுமே ஈட்டியது. மீதித்தொகையை டி.ராஜேந்தரிடம் கேட்டேன். அவர் தரவில்லை. எனவே ஒப்பந்தத்தை மீறியதாகவும், மீதித் தொகையான 34 லட்சத்து 75 ஆயிரத்தை கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். அது இன்னமும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் சிலம்பரசன் நடித்துள்ள சிலம்பாட்டம் படத்தின் சென்னை உரிமையை டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் வாங்கியுள்ளது. எனக்கு சேர வேண்டிய தொகையை செலுத்தாமல் இப்படத்தை சென்னையில் ரிலீஸ் செய்யக்கூடாது. அதற்கு தடைவிதிக்க வேண்டும், என மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications











