எஸ்.ஜே.சூர்யாவின் வில் 'விட்டாச்சு'?

எஸ்.ஜே.சூர்யா நடிக்க பூஜை போடப்பட்ட படம் வில்.இப்படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தயாரித்து வந்தார். ஆனால் படம் இடையில் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விஜய், பிரபுதேவா இணையில் வில் என்ற பெயரில் புதிய படம் உருவாகவுள்ளதாக தகவல்கள் வந்தன. இதனால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து வில் படத்தின் தலைப்பு வில்லு என மாற்றப்பட்டது.
இந்தச்சூழ்நிலையில் எஸ்.ஜே. சூர்யாவின் வில் படம் கைவிடப்பட்டு விட்டதாம். படத்திற்கு அட்வான்ஸ் தர எந்த விநியோகஸ்தரும் தயாராக இல்லை என்பதால்தான் சக்கரவர்த்தி படத்தைக் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் ஊனமுற்ற வாலிபர் வேடத்தில் நடித்து வந்தார் எஸ்.ஜே.சூர்யா. ஷெரின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
வில் படம் கைவிடப்பட்டது குறித்து எஸ்.ஜே.சூர்யாவிடம் கேட்டபோது, எனக்கு எதுவும் தெரியாது. எனது தயாரிப்பாளர் அமைதியாக உள்ளார். விரைவில் பவன் கல்யாணை வைத்து தெலுங்கில் புலி படத்தை தொடங்கவுள்ளேன் என்றார் எஸ்.ஜே.சூர்யா.


Click it and Unblock the Notifications











