விஜய்யின் 'சுறா'வையும் வாங்கிய சன்!

ஏற்கெனவே விஜய் நடித்த 49வது படமான வேட்டைக்காரனை வாங்கியது சன் பிக்ஸர்ஸ்.
இந்தப் படம் சன் பிக்ஸர்ஸ் வசம் வந்த பிறகு விஜய்க்கும் சன்னுக்கும் ஏக லடாய் என்றெல்லாம் செய்திகள் வந்த நிலையில், இப்போது சுறாவும் சன் பிக்ஸர்ஸ் வசம் வந்திருப்பதை அறிந்து ஆச்சர்ய பார்வைப் பார்க்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
விசாரித்ததில், வேட்டைக்காரனை வாங்கிய போதே சுறாவையும் வாங்கிவிட்டதாம் சன் பிக்ஸர்ஸ். இதனால்தான், வேட்டைக்காரன் விவகாரத்தில் சன் பிக்ஸர்ஸ் ரீஷூட் மற்றும் கரெக்ஷன் சொன்னதற்கும் கூட மறுபேச்சில்லாமல் விஜய் ஒப்புக் கொண்டார் என்கிறார்கள்.
விஜய்-தமன்னா நடிக்கும் சுறாவை தயாரிப்பவர் சங்கிலி முருகன். கிட்டத்தட்ட ரூ.35 கோடிக்கு சன் பிக்சர்ஸுக்கு இந்தப் படத்தை கைமாற்றியுள்ளதாகப் பேசப்படுகிறது.
எஸ்.பி.ராஜ்குமார் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. எல்லாம் சரியாக நடந்தால், வரும் ஏப்ரல் 14ம் தேதி இந்தப் படத்தை வெளியிடும் திட்டத்தில் உள்ளார்களாம் சன் நிறுவனத்தினர்.


Click it and Unblock the Notifications











