விஜய்-50: தயாரிப்பு எஸ்.ஏ.சந்திரசேகரன்!

இதுவரை இப்படியே 47 படங்களைக் கொடுத்துவிட்டார். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வில்லு 48-வது படம்.
தனது 49-வது படத்தைத் தயாரிக்கும் வாய்ப்பை ஏவிஎம்முக்குக் கொடுத்துப் 'பெருமைப்படுத்தி"யிருக்கும் விஜய், 50-வது படத்தை மட்டும் வெளியாருக்குக் கொடுக்கவில்லை.
தனது தந்தையின் சொந்த நிறுவனமா விவி கிரியேஷன்ஸ் அல்லது ஷோபா கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கப் போகிறார்.
இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்புக்காக இப்போதே ஏகப்பட்ட அதிரடி ஆக்ஷன் கதைகளை தமிழகத்தின் புகழ்பெற்ற ஊர்களின் பெயர்களை எல்லாம் தலைப்பாக்கி சந்திரசேகரனிடம் சொல்லி வைத்திருக்கிறாராம் குத்து இயக்குநர் பேரரசு.
ஆனால் விஜய்யின் விருப்பம் பிரபு தேவாதானாம். வில்லு எப்படி ஓடினாலும் பரவாயில்லை. ஆனால் தனது 50-வது படம் இயக்கும் வாய்ப்பு மட்டும் பிரபுதேவாவுக்குதான், அதில் தலையிடாதீங்கப்பா... என தந்தையிடம் கூறிவிட்டாராம்.
இந்த ஐம்பதாவது பட மேட்டர் த்ரிஷாவுக்கு தெரியுமாங்ணா...?


Click it and Unblock the Notifications











