twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ.3 லட்சம் கொடுத்து புதிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய ஆமிர்கான்!

    |

    Aamir Khan
    மும்பை: தனது புதிய ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு ரூ.3 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பர் வாங்கியுள்ளார் பாலிவுட் நடிகர் ஆமிர்கான்.

    பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர்கான் கார்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர். ஓய்வு நேரங்களில் கார்களில் பயணம் செய்வது அவருக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. ஏற்கனவே அவரது வீடுகளை பல முன்னணி நிறுவனங்களின் காஸ்ட்லி கார்கள் அலங்கரித்து வருகின்றன.

    இந்த நிலையில், புதிய ரோல்ஸ்ராய்ஸ் காரை சமீபத்தில் வாங்கியுள்ளார் ஆமிர்கான். இந்த கார் நேற்று மும்பை சதராவிலுள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. ஏஜென்ட் ஒருவர் அந்த காரை பதிவு செய்வதற்காக ஆர்டிஓ அலுவலகம் கொண்டு வந்திருந்தார்.

    ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அந்த சில்வர் நிற ரோல்ஸ்ராய்ஸ் காரை, அங்கு வந்த பொதுமக்கள் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்தனர். அந்த கார் அட்விட்டல் போஸ்ட் ஸ்டூடியோஸ் லிமிடேட், 7டி, சில்வர் வாலி சொசைட்டி, மஹாபலேஸ்வர் என்ற முகவரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், அந்த காருக்கு ரூ.3 லட்சம் கொடுத்து பேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார் ஆமிர்கான். மேலும், அந்த காருக்கு ரூ.47 லட்சம் வரியாக செலுத்தப்பட்டுள்ளது.

    இதனை, சதரா ஆர்டிஓ அலுவலர் வி.ஆர்.குஜராத்தி உறுதிப்படுத்தினார். அந்த காருக்கு "எம்எச் 11 ஏஎக்ஸ்1"(MH 11 AX 1) என்ற பதிவு எண் வழங்கப்பட்டுள்ளது. ஆமிர்கானின் வேண்டுகோளின்பேரில் '1'ம் எண் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    English summary
    
 Actor Aamir Khan got his new Rolls-Royce registered at Maharashtra's Satara regional transport office on Saturday. It has a special number, MH 11 AX 1. People stopped by to see the shining, metallic silver car when it was brought to the RTO. Deputy regional transport officer VR Gujarathi confirmed the car was Khan's and he had requested the number '1'. "The RTO charged over Rs 47 lakh tax and another Rs 3 lakh for the special number.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X