மகாதீரா தமிழ் ரீமேக்கில் அஜீத்?

சமீபத்தில் தெலுங்கில் சிரஞ்சீவி மகன் ராம் சரண் நடித்து வெளியாகியுள்ள மகாதீரா ஒரு வாரத்தில் ரூ.22 கோடி வசூல் செய்து பிரமிக்க வைத்துள்ளது.
முன்பிறவிக் கதையான இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்ய பலரும் விரும்பினர். விஷால் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைப் பெற பெரும் முயற்சி செய்தார்.
ஆனால், இந்த உரிமையை யாருக்கும் தரவில்லை மகாதீரா தயாரிப்பாளர்கள்.
இந்த நிலையில் அந்தப் படத்தை கலைப்புலி தாணுவுடன் இணைந்து தாங்களே தமிழில் தயாரிக்க விரும்புகிறார்களாம். அந்தப் படத்தில் அஜீத் நாயகனாக நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
மகாதீரா அஜித் நடிப்பில் உருவாவது உறுதியானால், இது அவரது பொன்விழாப் படமாக அமையும்.
இந்தப் படத்தை இயக்குவது யார் என்பது குறித்து தீவிர யோசனையில் இருக்கிறார்களாம்.
Comments
ajith அஜீத் சினிமா தமிழ் தெலுங்கு பொன்விழா படம் மகாதீரா ரீமேக் cinema golden jubilee magadheera remake thaanu


Click it and Unblock the Notifications