அக்ஷய் குமார் சம்பளம் 75 கோடி?

By Staff

Akshay Kumar with wife Twinkle
தமிழ் ஹீரோக்களுக்கு காதில் புகை வருமளவுக்கு ஒரு செய்தி சொல்லவா...

இந்தி நடிகர் அக்ஷய் குமாரின் சம்பளத்தை ரூ.75 கோடியாக உயர்த்தியிருக்கிறதாம் யுடிவி நிறுவனம்!!

தங்கள் நிறுவனம் அடுத்து தயாரிக்கும் 3 புதுப்படங்களில் ஒன்றில் நாயகனாக அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்துள்ள யுடிவி, ஷாரூக், அமீர், சல்மான்கான்களை மிஞ்சும் அளவுக்கு மிகப்பெரிய சம்பளத்தைத் அக்ஷய்க்குத் தர முடிவுசெய்துள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த யுடிவி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அக்ஷய்க்கு குமாருக்கு பெரிய சம்பளம் தரப்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது எவ்வளவு என்பதை இந்த சூழலில் வெளியிட முடியாது. இந்த ஒரு படம் மட்டுமல்ல, எங்களுடைய மேலும் 3 படங்களில் அக்ஷய்குமார் நடிக்கப் போகிறார். விரைவில் எங்கள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இதுபற்றி அறிவிக்கும், என்றார்.

இந்தச் செய்தி மட்டும் உறுதியானால், உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவராகிவிடுவார் அக்ஷய்.

ஏற்கெனவே ப்ரியதர்ஷனின் பூல் புலைய்யா வெளியான தருணத்தில் ஒரு படத்துக்கு அக்ஷய் குமார் ரூ.35 கோடி வரை சம்பளம் வாங்கியதாக செய்திகள் வெளியாகின. அதை அக்ஷய் மறுக்கவுமில்லை.

ஷாரூக்கான், அமீர்கான் ரேஞ்சுக்கு வர்த்தகம் உள்ள ஹீரோ என்பதால் அக்ஷய்க்கு அந்த அளவு சம்பளம் கொடுப்பதில் வியப்பில்லை என்றே பாலிவுட் நடிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இது ரொம்ப ஓவர்தான்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X