ஆர்யாவின் மதராஸ் பட்டணம்

இயக்குநர் பாலாவின் நான் கடவுள் படத்தில் புக் ஆன அடுத்த நிமிடமே அந்தப் படத்தின் கேரக்டராக மாறி விட்டார் ஆர்யா. ஜடா முடி வளர்த்து கேரக்டருக்குள் போய் விட்ட ஆர்யா, வேறு எந்த சிந்தனையும் இல்லாமல் பாலாவுடனும், பாலா யூனிட்டுடனும் வாழ்ந்து கொண்டிருந்தார்.
தற்போது நான் கடவுள் முடிந்து விட்டது. படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் மற்ற படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் ஆர்யா.
நான் கடவுள் படத்துக்கு முன்பே ஒத்துக் கொண்ட விஷ்ணுவர்த்தனின் சர்வம் படத்தை தற்போது முடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையடுத்து கிரீடம், பொய் சொல்லப் போறோம் பட புகழ் இயக்குநர் விஜய்யின் புதிய படம் ஒன்றில் நடிக்க புக் ஆகியுள்ளார். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆர்யா புக் ஆகியுள்ள முதல் படம் இதுதான்.
இப்படத்துக்கு மதராஸ் பட்டணம் என்று பெயரிட்டுள்ளனர். இது பழைய காலத்து பிரிட்டிஷ் மெட்ராஸ் குறித்த கதையாம். அதாவது 40களில் கதை நடப்பது போல உள்ளதாம்.
இது ஒரு காதல் கதை. பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் நடைபெறும் திரில்லான காதல் கதை. மெட்ராஸ் பையனாக ஆர்யா நடிக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த கோமானின் மகள் மீது காதல் கொள்பவராக வருகிறாராம்.
கலைப்புலி அகோரம் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே சந்தோஷ் சுப்ரமணியம் படத்தைத் தயாரித்தவர். நிரவ் ஷா கேமராவைக் கையாளுகிறார். இசையை ஜி.வி.பிரகாஷ் கவனிக்கிறார்.
இப்படத்துக்காக 40களில் இருந்ததைப் போன்ற மெளன்ட் ரோடு, பழைய சென்டிரல் ரயில் நிலையம், மூர் மார்க்கெட், குளோப் தியேட்டர் ஆகியவற்றை ஆர்ட் டைரக்டர் செந்தில்குமார் உருவாக்கவுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











