'சிலக்கம்மா' தனுஷ்!

தனுஷ் நடித்து வரும் புதிய படம் படிக்காதவன். இது ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் பெயர் என்பதால் இப்படத்தை வெற்றிப்படமாக்க வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து பல மேட்டர்களைப் படத்தில் சேர்த்து வருகிறார்கள்.
இது ரீமிக்ஸ் காலம் என்பதால் இரு பாடல்களை இப்படத்துக்காக ரீமிக்ஸ் செய்துள்ளனர். ஒன்று, அந்தக்காலத்தின் சூப்பர் ஹிட் படமான பத்ரகாளி படத்தில் இடம் பெற்ற கேட்டேளா அங்கே, அதைப் பார்த்தாளே இங்கே என்ற சூப்பர் ஹிட் பாடல்.
இந்தப் பாட்டுக்கு தமன்னா செம ஆட்டம் போட்டிருக்கிறாராம்.
இதுதவிர சிரஞ்சீவியின் சூப்பர் ஹிட் படமான சூடலானி உந்தி படத்தில் இடம் பெற்ற ரா ரா சிலக்கம்மா பாடலையும் ரீமிக்ஸ் செய்து கோர்த்து விட்டுள்ளனராம்.
இந்தப் படத்தின் இசையமைப்பாளர் மணிசர்மா. இவர்தான் சூடலானி உந்தி படத்திற்கும் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications