'தோல்வி எனக்கு ஒரு ஆசிரியர் மாதிரி'- சிரஞ்சீவி

மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அம்மாநில மக்கள் மாற்றம் வேண்டி நிச்சயம் பிரஜா ராஜ்யத்தையே மாநில ஆட்சியில் அமர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அனைத்தும் பொய்த்துப் போயுள்ளது. 18 சட்டசபைத் தொகுதிகளை மட்டுமே பெற்ற சிரஞ்சீவி கட்சி, போட்டியிட்ட அனைத்து மக்களவைத் தொகுதிகளிலுமே தோற்றுள்ளது. ஆனால் இந்தத் தோல்வி குறித்து அவர் கூறியுள்ள கருத்து மிகவும் பக்குவப்பட்டதாக அமைந்துள்ளது.
இந்தத் தோல்விகள் குறித்து சிரஞ்சீவி கூறியதாவது:
"இந்தத் தேர்தல் முடிவுகள் எனக்கு எந்த வித ஏமாற்றத்தையும் அளிக்கவில்லை. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரசுக்கு மக்கள் வலுவான அங்கீகாரத்தை வழங்கி உள்ளனர். நிலையான ஆட்சிக்காக காங்கிரசுக்கு மக்கள் வாக்களித்து உள்ளனர்.
மக்கள் ஒருபோதும் தவறு செய்ய மாட்டார்கள். மக்கள் முடிவை எல்லா வகையிலும் மதிக்க வேண்டும். சினிமா துறையில் இருந்தபோதும் தோல்வியால் துவளாதவன் நான். தோல்வியை ஒரு ஆசிரியராக கருதி, அதில் இருந்து பாடம் கற்று எனது தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் எழுவேன். அரசியலிலும் எனது இந்த முயற்சி தொடரும்' என்றார்.


Click it and Unblock the Notifications











