twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கம்ஹாசனின் கோரிக்கையை நிராகரித்த கோவா இந்திய பட விழாக் குழு

    By Staff
    |

    Kamal Haasan
    திரையுலகில் பொன் விழா காணும் கலைஞானி கமல்ஹாசனைக் கெளரவிப்பதாக கூறிக் கொண்டு வெறும் 3 படங்களை மட்டுமே திரையிடுவதாக கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாக் குழுவினர் கூறி கமல்ஹாசனை கிட்டத்தட்ட அவமதித்துள்ளனர்.

    ஆனால் 7 படங்களைப் போட்டால் நான் வருகிறேன் என்று கமல்ஹாசன் கூறி விட்டார்.

    இந்தியத் திரையுலம் வெறும் இந்தித் திரையுலகமாகவே இருக்கிறது. மும்பையைத் தாண்டி தென்னகத்தின் பக்கம் தங்களது பார்வையை அவர்கள் முழுமையாக திருப்புவதே இல்லை. எல்லாமே அவர்களுக்கு இந்திதான்.

    கோவாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாக் குழுவினரும் இதற்கு விதி விலக்கல்ல. பல்வேறு சாதனைகளுடன் இன்றளவும் வேகத்துடனும், விவேகத்துடனும் நடை போட்டுக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் திரையுலகில் நுழைந்து 50 ஆண்டுகளாகி விட்டது. அமிதாப் பச்சனை விட சீனியர் கமல்ஹாசன்.

    தென்னிந்தியத் திரையுலகில் பல்வேறு புதிய உத்திகளையும், தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னோடியான கமல்ஹாசனைக் கெளரவிக்கும் வகையில் கோவை சர்வதேச இந்திய படக் குழுவினர் முடிவு செய்தனர்.

    ஆனால் கமல்ஹாசனை மட்டும் கெளரவித்தால் தமிழையும் தென்னிந்திய மொழிப் படங்களையும் பெரிதாக கெளரவித்தது போலாகி விடுமோ என்று நினைத்தார்களோ என்னவோ என்றைக்கோ ரிடையர்ட் ஆகி விட்ட, ஆஷா பரேக், ஷர்மிளா தாகூர் மற்றும் செளமித்ரா சாட்டர்ஜி ஆகியோருடன் சேர்த்து கமல்ஹாசனைக் கெளரவப்படுத்தும் வகையில் அவரது 3 படங்களைத் திரையிட திட்டமிட்டனர்.

    ஆனால் கமல்ஹாசன் இதை ஏற்கவில்லை. 7 படங்களைத் திரையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். ஆனால் அதை நிராகரித்து விட்டது விழாக் குழு. அதற்குப் பதிலாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில், கமல்ஹாசன் குறித்த தனி திறனாய்வு நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போகிறார்களாம்.

    இதுகுறித்து கோவா திரைப்பட விழா குழு இயக்குநர் எஸ்.எம்.கான் கூறுகையில், கமல்ஹாசனின் கோரிககையை எங்களால் ஏற்க முடியாத நிலை. எனவே அடுத்த ஆண்டு பி்ப்ரவரி மாதம் டெல்லியில் கமல்ஹாசன் குறித்த தனி திறனாய்வு நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார்.

    1959ம் ஆண்டு களத்தூர் கண்ணம்மா மூலம் நடிப்பைத் தொடங்கினார் கமல். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதையும் தட்டிச் சென்றார்.

    இந்த ஆண்டு கோவா பட விழாவில் 45 நாடுகளைச் சேர்ந்த 55 படங்கள் திரையிடப்படவுள்ளன. போட்டிப் பிரிவில் 13 படங்கள் இடம் பெறுகின்றன. இதில் 2 படங்கள் இந்தியாவைச் சேர்ந்தவை.

    அமிதாப்புக்கும் அவமானம்...

    கமல்ஹாசனை இப்படி அவமானப்படுத்தியதைப் போல தற்போது அமிதாப்பச்சனையும் அவமானப்படுத்தியுள்ளனர்.

    அமிதாப்பச்சனை இந்த விழாவுக்கு அழைப்பது தொடர்பாக இஃபி குழுவுக்கும், கோவா பொழுது போக்குக் கழகத்திற்கும் இடையே மோதல் மூண்டுள்ளதாம்.

    போட்டியை நடத்தும் சர்வதேச இந்திய திரைப்பட விழா இயக்குநரகம், அமிதாப்பை அழைக்க விரும்பவில்லையாம். ஆனால் கோவா பொழுதுபோக்குக் கழகம், அமிதாப்பை அழைக்க வேண்டும் என கூறுகிறதாம்.

    இதுகுறித்து பொழுதுபோக்குக் கழக உறுப்பினர் ராஜேந்திர தலக் கூறுகையில், பச்சனை அழைக்க நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இயக்குநரகம் மறுக்கும்போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார்.

    இஃபிக்கு ஏன் இந்த வேலை...

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X