twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இணைய இதழாக வரும் கமலின் 'மய்யம்'!

    By Staff
    |

    Kamal Haasan
    சென்னை: நடிகர் கமல்ஹாசனின் 'மய்யம்' இதழை இணைய இதழ் வடிவில் கொண்டுவர ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    'ஆன்லைன் போர்ட்டல்' அல்லது 'பிளாக்' வடிவில் மய்யத்தை வெளிக்கொண்டுவர திட்டமிடப்படுகிறது. இதற்காக எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் நண்பர்கள் மத்தியில் கமல் ஆலோசனை நடத்திவருகிறார்.

    ஆடியோ, வீடியோ பாட்கேஸ்ட் வசதியுடன் கமலுக்கென்று தனி பக்கமும் இதில் இருக்கும் என தெரிகிறது. உலக சினிமா, இந்திய சினிமா, தமிழ் சினிமா தொழில்நுட்பம் குறித்து வாசகர்களுடன் கமல் பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொள்ள இதன் மூலம் தளம் அமைக்கப்படும்.

    அதோடு கமல் தனது இலக்கிய, எழுத்துப் பயணத்தையும் மய்யத்தின் மூலம் தொடருவார் என தெரிகிறது. புதிதாக தொடங்கப்படும் மய்யம் தளத்தை, சாத்தியப்படும் தொழில்நுட்ப அம்சங்கள் அத்தனையையும் பயன்படுத்தி படு நவீன முறையில் இயக்கவும் திட்டமிடப்படுகிறது.

    சக கலைஞர்களின் சாதனைகள், உலக சினிமா வரலாற்று தகவல்கள் எல்லாம் அடங்கிய இந்த இணையதளத்தில் அரசியலுக்கு இடமிருக்காது என திட்டவட்டமாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசனின் நெருங்கிய நண்பர்களான வசனகர்த்தா கிரேஸி மோகன், தமிழறிஞர் ஞானசம்பந்தன், எழுத்தாளர் இரா.முருகன் மற்றும் நடிகை கௌதமி ஆகியோர் கொண்ட குழு மய்யம் இணைய தள வடிவமைப்பையும், செயல்திட்டத்தையும் நிர்வகித்து வருகிறது.

    இதுதொடர்பாக மூத்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜனையும் கமல் சந்தித்து பேசியதாகவும், பங்களிப்பை கோரியதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

    மய்யம் இணைய இதழ் குறித்து இரா.முருகன் தனது வலைப்பக்கத்தில் குறிப்பிடுகையில், 'மய்யம் இணைய இதழ் (Portal) வெகு விரைவில் மின்னரங்கேற இருக்கிறது. தமிழில் இது மிக முக்கியமான, இலக்கியம் - கலை இரண்டையும் இன்றைய தொழில்நுட்ப நேர்த்தியில் இணைத்து வழங்கும் பரபரப்பான தலைவாசலாக இருக்கும்' எனக் கூறியுள்ளார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X