'குசேலரு' ஷூட்டிங் தொடக்கம்

By Staff

Rajini, Chandrababu Naidu and Chiranjeevi
குசேலன் தமிழ்ப் படத்தின் தெலுங்குப் பதிப்பான குசேலரு படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் தொடங்கியது. தெலுங்கு முன்னணி ஸ்டார்கள் அனைவரும் கலந்து கொண்டு ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

மலையாளத்தில் வெளியான கத பறயும் போள் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தமிழில் குசேலன் என்ற பெயரிலும், தெலுங்கில் குசேலரு என்ற பெயரிலும் இப்படத்தை இயக்கவுள்ளார் பி.வாசு.

ரஜினிகாந்த், பசுபதி, நயனதாரா, மீனா, வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தமிழ்ப் படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிலையில் தெலுங்குப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் நடந்தது.

இந்த விழாவில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான மெகா ஸ்டார் சிரஞ்சீவி, டாக்டர் ராஜசேகர், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்னர்.

சிரஞ்சீவி கிளாப் அடித்து படப்பிடிப்பை முறைப்படி தொடங்கி வைத்தார்.

தெலுங்குப் பதிப்பை வைஜெயந்தி பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த விழாவில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், ரஜினியின் நண்பருமான சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் தாசரி நாராயண ராவ், நடிகர் மோகன்பாபு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில கலந்து கொண்ட சிரஞ்சீவி, சந்திரபாபு நாயுடு, தாசரி நாராயண ராவ் உள்ளிட்டோர் ரஜினிக்கும் தங்களுக்கும் உள்ள நட்பு குறித்த சுவாரஸ்ய தகவல்களை அனைவருடனும் பகிர்ந்து கொண்டனர்.

இறுதியாக ரஜினி அனைவரும் நன்றி தெரிவித்துப் பேசினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு டோலிவுட்டுக்குத் திரும்பி வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தெலுங்கு குசேலன் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் ஜெகபதி பாபு, நன்றி நவின்றார். பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ராமாநாயுடு, அல்லு அரவிந்த், தனிகல பரணி மற்றும் தெலுங்குத் திரையுலகினர் பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X