ஒரு வழியாய் டப்பிங் பேசினார் மாதவன்!

கவுரவ் ஷர்மா இயக்கும் நான் அவள் அது படத்திற்கு பேசிய சம்பளம் தராததால் டப்பிங் பேச முடியாது என பின்வாங்கினார் மாதவன்.
இதனால் வேறு டப்பிங் கலைஞரை வைத்து மாதவனுக்கு டப் செய்து படத்தை வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் அறிவிக்க, உடனே நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் கவுன்சிலை நாடினார் மாதவன்.
படத்தின் தயாரிப்பாளர்களும் வி்டடுக் கொடுக்காமல் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு தங்கள் தரப்பு நியாயங்களைக் கூறினர்.
கடைசியில் இருதரப்பினரையும் சமாதானப்படுத்திய தயாரிப்பாளர் சங்கம், விட்டுக் கொடுத்து போகும் போக்கைக் கடைப்பிடிக்குமாறும், இன்றைக்கு சினிமா உள்ள சிரமமான நிலையில் இதுதான் நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து டப்பிங் பேச ஒப்புக் கொண்ட மாதவன், பரணி ஸ்டுடியோவில் முழுவதுமாக பேசி முடித்தார். மாதவனின் மார்க்கெட் சற்று பிக்கப் ஆகியிருப்பதால், பேசியபடி சம்பளம் தரவும் தயாரிப்பாளர்கள் ஒப்புக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











