திரையுலகில் 30 ஆண்டுகள்: மோகன் லாலுக்கு பாராட்டு விழா!

By Staff

Mohanlal
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் திரையுலகுக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி அவருக்கு பாராட்டு விழா நடத்துகிறது கேரள திரையுலகம்.

மலையாளத்தில் கடந்த பல ஆண்டுகளாக முதல் நிலை நடிகராகத் திகழ்பவர் மோகன்லால். மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். 1979-ம் ஆண்டு முதல் பசம் நடித்தார் மோகன்லால். இந்த ஆண்டோடு அவர் நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகின்றன.

மேலும் பல படங்களில் ராணுவ அதிகாரியாகவும், ராணுவத்தைச் சிறப்பிக்கும் வகையிலும் நடித்துள்ளார் மோகன்லால். இதற்காக அவருக்கு ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் பதவியும் சமீபத்தில் வழங்கப்பட்டது.

திரையுலகில் மோகன் லாலின் 30 வது ஆண்டு நிறைவு விழா மற்றும் அவருக்கு ராணுவத்திலி கிடைத்துள்ள கவுரவத்துக்குப் பாராட்டு விழா ஆகியவற்றை ஒருங்கிணைந்த விழாவாக நடத்துகிறது மலையாளத் திரையுலகம்.

திருவனந்தபுரம் சந்திர சேகரன்நாயர் ஸ்டேடியத்தில் செப்டம்பர் 1-ந்தேதி நடக்கும் விழாவில் மோகன்லால் கவுரவிக்கப்படுகிறார். விழாவில் மம்முட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் கேரள அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

கேரள முதல்வரை இந்நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X