Don't Miss!
- News ஆஹா.. உபி-இல் பாஜகவுக்கு தலைவலி! ராஜ்புத் சமூகம் எடுத்த முடிவால் பெரிய சிக்கல்! கையை பிசையும் தலைகள்
- Lifestyle குரு பெயர்ச்சி 2024: மே 01 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance பனமழை கொட்டும்.. அதிக லாபம் தரும் டாப் 10 முதலீட்டு திட்டங்கள்.. அடடா இவ்வளவு லாபமா!
- Sports T20 WC 2024: நானும், கோலியும் தொடக்க வீரர்களா? யாரு இப்படி சொல்றாங்க.. ரோகித் சர்மா ஓபன் டாக்!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ரத்ததானம்-ரஜினி ரசிகர்களுக்கு இணையதளம்!
தமிழகமெங்கும் ரத்ததானம் செய்ய விரும்பும் ரசிகர்களை ஒருங்கிணைத்து இந்த இணையதளத்தை துவக்கியுள்ளனர்.
www.rajiniblood.com என்ற இந்த இணைய தளத்தை நெல்லையை சேர்ந்த ரஜினி ரசிகர் தாயப்பன், சிவகாசி ரசிகர்கள் பொன்ராஜ், ஆறுமுகம் ஆகியோர் துவங்கியுள்ளனர்.
அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவோர் தங்களுக்கு தேவைப்படும் ரத்தத்தின் வகை மற்றும் எந்த மாவட்டத்தில் தேவை என்ற விவரத்தை அதில் தெரிவித்தால் உடனடியாக ரத்ததானம் செய்பவர்களுக்கு தெரிவிக்கப்படும். ஏராளமான ரசிகர்கள் ரத்ததானம் செய்ய பெயர்களை இதில் பதிவு செய்து வருகிறார்கள். எனவே அவர்கள் மூலம் தேவையான ரத்தம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
இது முழுக்க முழுக்க இலவச சேவை.
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நேற்று முதல் இந்த இணைய தளம் செயல்படத் துவங்கியுள்ளது. இந்த தளத்திலேயே யார் ரத்ததானம் செய்யலாம், அதனால் ஏதாவது பாதிப்பு உண்டா போன்ற முக்கிய குறிப்புகளையும் தந்துள்ளனர்.
இதுகுறித்து நெல்லை ரசிகர் தாயப்பன் கூறியதாவது:
இப்படி ஒரு அமைப்பை கடந்த டிசம்பர் 12ம் தேதியே துவங்கிவிட்டோம். இது முழுக்க முழுக்க இலவச சேவையே. ரத்ததானம் செய்யும் ஆர்வமுள்ள சக ரசிகர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சி இது என்றார்.