twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வந்தேறிகள் சுகவாழ்வு வாழ, ஒரு தமிழ் தாய்க்கு அனுமதி மறுப்பதா? – சீமான் கண்டனம்

    By Sudha
    |

    Seeman
    சென்னை: இந்தியாவில் வந்தேறிகள் எல்லாம் சுகவாழ்வு வாழ்கிறார்கள். பாகிஸ்தான் சிறுவனுக்கு சிகிச்சை தருகிறார்கள். ஆனால் ஒரு வயதான தமிழ்த் தாய்க்கு அனுமதி மறுக்கிறார்கள். தமிழர் மீதான துவேஷம் இது" என இயக்குநரும் நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கை:

    விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தாய் பார்வதி அம்மாள் தனது உடல் நலம் குன்றியதால் சிகிச்சை பெறுவதற்காக முறைப்படி விசா பெற்று இந்தியாவிற்கு வந்தவரை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் ஈவிரக்கமின்றி மத்திய மாநில அரசுகள் திருப்பி அனுப்பியுள்ளன.

    உரிய அனுமதி பெற்று வந்த ஒருவரை தடுத்த இது மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல சட்ட விரோத செயலுமாகும்.

    பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிறுவனுக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய இந்தியா உதவியது என்று புகைப்படம் எடுத்து உலகுக்கு தங்கள் மனிதாபிமானத்தை வெளிச்சமிட்டுக்காட்டுபவர்கள் இதில் இரட்டை வேடம் இடுவது ஏன்?

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கெல்லாம் பாடிச்சென்ற எம் பாட்டன் வாழ்ந்த மண்னில் இன்று இந்த மண்ணிற்குத் தொடர்பில்லாத இத்தாலியர் தொடங்கி மார்வாடி குஜராத்தி,மலையாளி,தெலுங்கர்கள் வரை அனைவரும் உல்லாச வாழ்வு வாழ்கையிலும் அதிகாரத்தில் இருக்கையிலும் எங்கள் அன்னையின் உடல் நலத்திற்கு சிகிச்சை பெற இந்த மண்ணில் அனுமதி மறுக்கப்படுகின்றது என்பது எவ்வளவு பெரிய வெட்கக்கேடான ஒன்று?

    உலகெமெல்லாம் வாழும் தமிழரின் ஒப்பற்ற தலைவனாம் எங்கள் அண்ணன் பிரபாகரனின் தாயாரை மனிதாபிமானமற்று திருப்பி அனுப்பியதன் மூலம் மத்திய மாநில அரசுகள் தமிழருக்கு எதிரான தங்கள் செயல்களைத் தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கின்றன என்று மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனிதாபிமானமற்ற சட்ட விரோத செயலுக்கு நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்..." என்று கூறியுள்ளார்

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X