'சிவ சிவ' சிபி!

By Staff

Sibi Raj with Namitha
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிபிக்குப் புதுப் படம் கிடைத்துள்ளது. லக்ஷனாவுடன் ஜோடி போட்டு கலக்கத் தயாராகியுள்ளார்.

பிரேக் இல்லாமல் போய்க் கொண்டிருந்த சிபிக்கு சூப்பர் பிரேக் ஆக அமைந்தது லீ. ஆனால் அதன் பின்னர் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை அல்லது அமைந்த வாய்ப்புகள் சிபிக்குத் திருப்தி தரவில்லை.

காத்தவராயன் படம் முதலில் சிபியைத்தான் தேடி வந்தது. நடிக்கலாமா என்ற யோசனைக்கும் அவர் போயிருந்தார். ஆனால் பின்னர் வேண்டாம் என்று கூறி விட்டார்.

அதன் பிறகு பல கதைகளைக் கேட்டவருக்கு இப்போது சிவ சிவ கதை பிடித்துப் போக உடனே பண்ணலாம் என்று கூறி விட்டார் சிபி. இதோ ஹீரோயினையும் முடிவு செய்து படப்பிடிப்புக் கிளம்பி விட்டனர்.

சிவ சிவ படத்தை இயக்குபவர் குணா. இவர் ஊமைவிழிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அரவிந்தராஜிடம் உதவியாளராக இருந்தவர்.

படத்தில் சிபிக்கு ஜோடியாக நடிப்பவர் லக்ஷனா. தோழா படத்தின் நாயகியான லக்ஷனா, இப்படம் மூலம் முன்னணி இளம் நடிகர் ஒருவருடன் இணை போடுகிறார்.

'சவசவ'ன்னு இல்லாம் 'நச்'சுனு எடுங்க குணா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X