போடா போடி..சிம்பு, ஷ்ரேயா!

இதோ... இப்போதுதான் போடா போடி என்று ஒரு படம் துவங்கப் போவதாக அறிவித்தார். அதற்குள் ஏகப்பட்ட செய்திகள் அந்தப் படத்தைப் பற்றி.
ஜெமினி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக நடிக்க முதலில் ஸ்ரேயாவை அணுகியிருக்கிரார்கள். ஆனால் சிம்புவுக்கு எந்த பதிலும் சொல்லாமல், சட்டென்று தனுஷூக்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார் ஸ்ரேயா. இப்போது ஸ்ரேயாவா வேறு நாயகியா என்ற குழப்பத்திலிருக்கிறார் சிம்பு.
இதற்கிடையே மாக்ஸிம் ஆங்கிலப் பத்திரிகைக்கு அம்மணி கொடுத்த ஹாட் போஸ்களைப் பார்த்து அசந்துபோன இயக்குநர் விக்னேஷ் சிவா மட்டும் இன்னும் ஸ்ரேயாதான் நாயகி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, கலை நிகழ்ச்சிக்காக கனடா போன சிம்பு, அங்குள்ள அழகிய லொக்கேஷன்களைப் பார்த்து சொக்கிப் போனாராம். போடா போடி படத்தை கண்டிப்பாகக் கனடாவில்தான் எடுத்தாக வேண்டும் என கண்டிஷனாக கூறிவிட்டாராம் இயக்குநரிடம்.
ஆகஸ்டில் தொடங்கும் போடாபோடி படப்பிடிப்புக்காக தொடர்ந்து 50 நாட்கள் கனடாவில் தங்கப் போகிறார்கள் சிம்பு மற்றும் அவர் குழுவினர்.
கனடாவுக்குப் போனபிறகு கதாநாயகியை மாற்றாமலிருந்தால் சரி!


Click it and Unblock the Notifications











