ஏப். 3ல் சூர்யா, தமன்னாவின் 'அயன்'!

உலகெங்கும் ஒரே நாளில் அயன் திரைக்கு வருகிறதாம். கே.வி. ஆனந்த் இயக்கியுள்ளார். சூர்யா, தமன்னா இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் ஹாட் ஸ்டார் கோய்னா மித்ராவின் சூடான நடனம் படத்தில் ஹைலைட்டான விஷயம்.
முதலில் இப்படத்தை ஏவி.எம் நிறுவனம்தான் தயாரித்தது. பின்னர் படத்தை அப்படியே சன் பிக்சர்ஸிடம் கொடுத்து விட்டது. ஆக்ஷன் படமான இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். அக்ஷதீப் சேகல் இப்படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகிறார். இவர் முன்னணி இந்தி டிவி நடிகர் ஆவார்.
இப்படத்தை தெலுங்கிலும் வீடகாடே என்ற பெயரில் டப் செய்துள்ளனர். தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் அயனை ரிலீஸ் செய்கின்றனர்.
முதலில் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். இருந்தாலும் கோடை கால ஸ்பெஷல் விருந்தாக இதை அளிக்க திட்டமிட்ட சன் பிக்சர்ஸ் தற்போது ஏப்ரல் 3ம் தேதிக்கு படத்தை ரிலீஸ் செய்கிறது.


Click it and Unblock the Notifications











