'சிட்டி'க்கு மாறிய அருள் நிதி!
வம்சம் படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார் முதல்வர் கருணாநிதியின் பேரனான அருள்நிதி.
முதல்வரின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மகன்தான் அருள் நிதி. இவர் வம்சம் படத்தின் மூலம் நடிகரானார். முதல் படத்தில் கிராமத்து இளைஞராக வந்து அனைவரையும் கவர்ந்தார்.
இப்போது அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். இது நகரத்து சப்ஜெக்ட்டாம். கரு பழனியப்பன், பாண்டிராஜ் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய சாப்ளின் இப்படத்தை இயக்கப் போகிறார். வம்சம் படத்தை இயக்கியவர் பாண்டிராஜ் என்பது நினைவிருக்கலாம். பிரபாகரன் தயாரிக்கிறார்.
கிராமத்து சப்ஜெக்ட்டில் கலக்கியதைத் தொடர்ந்து அடுத்து நகரத்து சப்ஜெக்ட்டிலும் அருள் நிதியைக் கலக்க வைக்கும் திட்டமாம். பக்கா கமர்ஷியல் படமாக இது உருவாகவுள்ளது என்பதால் அருள் நிதியை ஒரு முழுமையான ஹீரோவாக காட்டும் வகையில் காட்சியமைப்புகள் இருக்கும் என்கிறார்கள்.
அருள் நிதிக்கு ஜோடி யார் என்பது தெரியவில்லை. தெலுங்கு நாயகி பிரனீதா நடிக்கலாம் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











