Don't Miss!
- News சிறையில் இருந்தே டெல்லியில் ஆட்சி.. கெஜ்ரிவாலுக்கு அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான மனு
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ஆடியோ வடிவில் ரஜினி வாழ்க்கை வரலாறு!
மூன்று ஆண்டுகளுக்கு முன் 'ரஜனி' (Rajani - Vikshiptha, Vishishta, Vichitra) எனத் தலைப்பில் மகேஷ் தேவஷெட்டி என்ற பத்திரிகையாளர் ஒரு புத்தகம் எழுதினார். கன்னட மொழியில் அமைந்த இந்த புத்தகமே இப்போது ஆடியோவாக வருகிறது.
இதுகுறித்து லஹரி நிறுவன நிர்வாகி துளசி ராம் வேலு கூறுகையில்,
"ரஜினி சார் பற்றி மகேஷ் எழுதிய புத்தகத்தை அப்படியே ஆடியோவாக மாற்றுவது ஒரு சவாலான காரியமாகத்தான் இருந்தது. காரணம் இந்த கான்செப்ட் இதற்கு முன் நாங்கள் செய்திராத புதிய முயற்சி. ஆனால் மிகப் பெரிய திட்டமிடலோடு இந்த ஆடியோ புத்தகப் பணியை முடித்துவிட்டோம்.
இதுவரை வேறு எந்த ஆடியோ நிறுவனமும் இந்தியாவில் இதைச் செய்ததில்லை. இதற்கு முன், தனக்குப் பிடித்த ஒரு தலைவர் அல்லது நடிகர் குறித்த தமது கருத்துக்களை ஆடியோவில் பதிவு செய்து சிலர் வெளியிட்டுள்ளனர். ஆனால் அதற்கும் இப்போது நாங்கள் செய்துள்ள முயற்சிக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
புத்தகத்தின் சுவாரஸ்யம் ஆடியோவில் கேட்கும்போதும் இருக்க வேண்டும். புத்தகத்தின் எந்தப் பகுதியும் விடுபடாத அளவுக்கும் தயாரிக்க வேண்டும். இன்னொன்று ரஜினி என்ற பன்முக மனிதருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு அனைவருக்கும் தெரியும். சின்ன தவறு நேர்ந்தாலும் அதன் விளைவு எப்படியிருக்கும் எனப் புரிந்து இந்த முயற்சியில் ஈடுபட்டோம்.
ரஜினி பற்றிய புத்தகத்தைப் படிக்காதவர்களுக்கு இந்த சிடி மற்றும் காஸெட் பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். ரஜினி வரலாற்றை ஆடியோ புத்தகமாக வெளியிடுவதில் எங்களுக்குக் கிடைத்த வெற்றி, இதைப் போன்ற மேலும் பல முயற்சிகளில் இறங்கத் தூண்டுதலாக உள்ளது..." என்றார்.