மாமனார் தயாரிப்பில் அருண்!

By Staff

Arun Vijay with Sheela
விஜயக்குமாரின் புதல்வன் என்ற அடையாளத்திலிருந்து இன்னும் முழுமையாக வெளிவராமல் இருக்கும் நடிகர் அருண் விஜய், தனது மாமனார் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

விஜயக்குமாரின் அனைத்து வாரிசுகளுமே கிட்டத்தட்ட கலையுலகுக்கு தத்து கொடுக்கப்பட்டு விட்டனர். அவர்களில் ஒரே ஆண் வாரிசான அருண் விஜய், நல்ல நடிகராக அடையாளம் காணப்பட்டும் இன்னும் பெரிய ஸ்டார் ஆக முடியாமல் இருக்கிறார்.

கடைசியாக அவர் நடித்த தவம் படத்தில் நல்ல ஆக்ஷன் ஹீரோவாக வெளிப்பட்ட அருண், இப்போது தனது மாமனார் டாக்டர் என்.எஸ்.மோகன் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

டாக்டராக மட்டும் இல்லாமல் கிரானைட் ஏற்றுமதியாளராகவும் இருக்கிறார் மோகன். இப்போது மருமகனுக்காக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுக்கிறார்.

இவரும், மறைந்த நடிகர் ரகுவரனும் நல்ல நண்பர்களாம். அவருக்கு அஞ்சலி செலுத்தும்வகையில் படத் தயாரிப்பில் இறங்குகிறாராம் மோகன். அவரது மகன் ஹேமந்த் இணைத் தயாரிப்பாளராக செயல்படவுள்ளார்.

இந்தப் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் கால் டாக்சி டிரைவராக வருகிறார் அருண். நாயகி இன்னும் முடிவாகவில்லை. முக்கிய கேரக்டரில் பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளார். பட்டுக்கோட்டை பிரபாகர் திரைக்கதை, வசனத்தை எழுதுகிறார்.

படத்தில் தனக்கு அருமையான கேரக்டர் என்று சந்தோஷப்படும் அருண், என்னைத் தவிர படத்தில் 16 முக்கிய கேரக்டர்களும் இருக்கிறது. இது தமிழ் சினிமாவில் புதுமையான விஷயம் என்கிறார்.


More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X