ஜீவாவுக்குப் பதில் ஜெய்!

By Staff

Jay with Vijayalakshmi
ஜெய்க்கு சரியான இடத்தில் மச்சம் இருக்கும் போல. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பின்னர் படு வேகமாக கிளம்பியிருக்கும் அவரது திரை வலம், இப்போது ஜீவாவின் படத்தில் அவருக்குப் பதில் இடம் பெறும் அளவுக்குப் போயிருக்கிறது.

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக சின்ன வேடத்தில் வந்து போனவர் ஜெய். அது அவருக்கு நல்ல முகவரியாக அமைந்தது. இதைத் தொடர்ந்து வந்த சென்னை 600028 படம் ஜெய்யின் நடிப்பை அடையாளம் காட்டியது.

இருப்பினும் தனி ஹீரோவாக மதுரை பாஷையில் பட்டையைக் கிளப்பிய சுப்ரமணியபுரம், ஜெய்யின் மார்க்கெட்டில் கன மழையை கொண்டு வந்து விட்டுள்ளது.

ஜெய் கூட இப்படி நடிப்பாரா என்ற ஆச்சரியத்துடன் வாய்ப்புகள் வந்து குவிந்தவண்ணம் உள்ளனவாம். தற்போது 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜெய். மூன்றுமே வித்தியாசமான கதைகளாம்.

இந்த நிலையில் எதிர்பாராத ஆச்சரியமாக ஒரு படம் ஜெய்யைத் தேடி வந்துள்ளது. ஜீவா நடிக்க மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்ற படம் உருவாகவிருந்தது. இந்த நிலையில் திடீரென ஜீவா அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் ஜெய்யை அணுகியுள்ளனராம்.

ஜெய்யும் கதையைக் கேட்டு உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம். சீனியர் நடிகர் ஒருவரை நீக்கி விட்டு தன்னைத் தேடி வந்துள்ள கதை என்பதால் நிச்சயம் தனக்கு அது பெரும்வெற்றியைத் தேடி வரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளாராம் ஜெய்.

ஜே ஜே-ன்னு நடிங்க ஜெய்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X