ஜெயம் ரவியின் காதல் திருமணம்!

By Staff

Jayam Ravi with Kangana Ranaut
'ஆமா... நான் பண்ணிக்கப் போறது காதல் திருமணம்தான். இதை நானோ என் பெற்றோரோ ஒளித்து வைக்க விரும்பவில்லை. இருவீட்டார் சம்மத்தோடும் நடக்கும் இந்தக் காதல் திருமணம் வரும் ஜூன் 4ம் தேதி சென்னையில் உங்கள் எல்லாரது ஆசீர்வாதங்களோடும் நடக்கப் போகிறது', என்கிறார் ஜெயம் ரவி, முகம் முழுக்க சந்தோஷக் கீற்றுகள் மின்ன.

கோடம்பாக்கத்தில் அனைவரது விருப்பத்துக்குமுரிய இளம் நாயகன் என்ரால் அதில் முதலிடம் சந்தேகமில்லாமல் ஜெயம் ரவிக்குத்தான். இதுவரை நடித்த படங்களில் ஒன்றிரண்டு தவிர மீதி எல்லாமே சில்வர் ஜூப்ளி கொண்டாடியவை. ஆனாலும் தலைக்கனமில்லாத நடிகர் என்ற நல்ல பெயர். அதுமட்டுமல்ல... நடித்த எல்லா படங்களுமே குடும்பத்தோடு அமர்ந்து பார்க்கும் ரகத்தைச் சேர்ந்தவை.

கடந்த சில மாதங்களாகவே இவருக்கும் ஒரு நடிகைக்கும் காதல் என்ற ரீதியில் செய்திகள் கசிந்தன. 'காதல் உண்மைதான், ஆனால் காதலி நடிகையில்லை' என்ற உண்மையை சில தினங்களுக்கு முன்புதான் அறிவித்தார் ரவி. இப்போது பெற்றோர் சம்மதத்தோடு அந்தக் காதலை கல்யாணத்தில் கனிய வைத்துள்ளார் ரவி.

தன் வருங்கால மனைவி குறித்து ரவி இப்படிக் கூறுகிறார்:

ஒரு சிலரை அடிக்கடி சந்தித்திருப்போம். ஆனால் இவர்தான் தன் வாழ்க்கையில் துணையாக வரப்போகிறவர் என்பதை எதிர்பார்க்கவே மாட்டோம். அதுமாதிரிதான் எனக்கு மனைவியாக வரப்போகும் ஆர்த்தியும்.

இதுவரை விளையாட்டுப் பையனா இருந்திட்டேன். இப்போ என்னை நம்பி ஒருத்தர் முழுமையா தன்னை ஒப்படைக்கிறாங்க. பொறுப்பைக் கூட்டிக்கணும், என்கிறார் பொறுப்புணர்வுடன் ஜெயம் ரவி.

சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் திருமணம் நடக்கிறது.

ஜாதக குழப்பம்!

முதலில் ஜூன் 7ம் தேதி திருமணம் என்றே அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜாதக நம்பிக்கை காரணமாக திருமணத் தேதியை மூன்று நாள் கூட்டியே வைத்துவிட்டதாக, ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் அறிவித்துள்ளார். இந்த மாறுதல்படி வரும் ஜூன் 4ம் தேதி திருமணமும், 7ம் தேதி வரவேற்பும் நடைபெற உள்ளது.

அட்வான்ஸ் வாழ்த்துகள் ரவி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X