குறை சொல்பவர்கள் சொல்லட்டும்-கமல்

இந் நிலையில் தசாவதாரம் புரோமொசனுக்காக ஹைதராபாத் வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தசாவதாரம் படம் எடுப்பது பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தேன். படத்தை எடுக்க கடுமையாக உழைத்திருக்கிறோம்.
விரைவில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் எனது கனவுப் படமான 'மருதநாயகத்தை' பிரமாண்டமான முறையில் எடுக்க இருக்கி றேன். மர்ம யோகியை முடித்துவிட்டு அதற்கு வருவேன் என்றார்.
கேள்வி- தசாவதாரம் படம் தொழில் நுட்பரீதியாக நன்றாக உள்ளதாகவும் கதை பலவீனமாக இருப்பதாவும் சொல்கிறார்களே
கமல்- குறை சொல்பவர்கள் குறை சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அதைப் பற்றி எல்லாம் நான் கவலைப்படுவதே இல்லை.
என்னைப் பொறுத்தவரையில் தசாவதாரம் படம் மிக நன்றாக வந்துள்ளது. அதில் எந்தக் குறையும் காண முடியாது. மிக கவனமாகவே படத்தை எடுத்திருக்கிறோம்.
கேள்வி- தசாவதாரத்தில் நீங்கள் நடித்த கேரக்டர்களில் மிகவும் பிடித்த கேரக்டர் எது?
கமல்- ஒரு தாயிடம் நீங்கள் பெற்ற 10 குழந்தைகளில் எந்தக் குழந்தை பிடிக்கும் என்று கேட்டால் அவள் என்ன பதில் சொல்வாளே அதுதான் என் பதிலும். தசாவதாரத்தில் நான் நடித்த 10 கேரக்டர்களும் என் குழந்தைகள் மாதிரி என்றார் கமல்.


Click it and Unblock the Notifications











