கர்நாடகத்தில் 'குருவி' 1.2 கோடி!!

By Staff

Vijay in Kuruvi
கேரளாவைத் தொடர்ந்து குருவி படத்தின் கர்நாடக விநியோக உரிமையும் விற்று விட்டது. ரூ. 1.20 கோடிக்கு கர்நாடக உரிமை விலை போயுள்ளதாம்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், இயக்குனர் தரணி இயக்கிவரும் குருவி திரைப்படத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார்.
இந்த படத்தின் விநியோக உரிமைகள் விற்பனை நடந்துவருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநில விநியோக உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு போனது. தற்போது கர்நாடக மாநில தியேட்டர்கள் விநியாக உரிமை விலை உச்சத்தைத் தொட்டுள்ளது.

குருவி பட உரிமையை 1 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கர்நாடக மாநில பிரபல விநியோகஸ்தர் மண்டியா ஸ்ரீகாந்த் வாங்கியுள்ளார்.

விஜய்யின் முந்தைய படமான 'அழகிய தமிழ் மகன்' கர்நாடக மாநில உரிமை 75 லட்சத்துக்கு விலைபோனது. அதைக் காட்டிலும் கூடுதலாக குருவி விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி படத்திற்குப் பிறகு தமிழகத்தைத் தாண்டி அண்டை மாநிலங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ள படம் குருவிதானாம்.

இதுபற்றி குருவி படத் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், பக்கத்து மாநில விநியோக உரிமைகள் சிவாஜி படத்துக்கு அடுத்தபடியாக, குருவி படத்துக்கு அதிக விலையில் விற்கப்படுகிறது. மே மாதம் முதல் வாரத்தில் இந்த படம் திரைக்கு வரும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X