'அதிர்ஷ்டசாலி' மாதவன்!
இந்தியில் 3 இடியட்ஸ் படத்துக்குப் பிறகு, வேறு படம் எதிலும் தமிழில் நடிக்காமலிருந்த மாதவன், இப்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு அதிர்ஷ்டசாலி என தலைப்பிடப்பட்டுள்ளது.
யாவரும் நலம் என்ற திகில் படத்தை இயக்கிய விக்ரம் குமார்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார்.
விக்ரம், விஜய் ஆகியோருக்கெல்லாம் கதை சொல்லி வந்த விக்ரம் குமார், இப்போது மீண்டும் தனது பழைய ஹீரோவே போதும் என்று முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது. இந்தப் படம் முழுக்க முழுக்க இளமையான காதல் கதையாம்.
படத்தைத் தயாரிப்பவர் அமைச்சர் அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி. இவரது கிளவுட் நைன் மூவீஸ் பேனரில் இந்தப்படம் தயாராகிறது. ஹீரோயின் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் இன்னும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











