சிலம்பாட்டம் ரிலீஸுக்கு தடை இல்லை - கோர்ட்

By Staff

Simbu with Sana Khan
சிம்பு நடித்துள்ள சிலம்பாட்டம் படத்திற்குத் தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இடைக்காலத் தடை விதிக்க மறுத்து விட்டது.

திருச்சியை சேர்ந்த வினியோகஸ்தர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில், கடந்த 1998 ஆம் ஆண்டு டி. ராஜேந்தர் தயாரித்த மோனிஷா என் மோனலிசா என்ற படத்திற்காக ரூ.59 லட்சம் அவருக்கு கடனாக கொடுத்து குறைந்தபட்ச உத்தரவாதம் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டோம்.

அதன்படி 5 ஆண்டுகளுக்கு திருச்சியில் அப்படத்தை திரையிட்டு வருமானத்தை எடுத்து கொள்வதாக ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த படம் ஓடவில்லை. 25 லட்சம் மட்டுமே ஈட்டியது. மீதித்தொகையை டி.ராஜேந்தரிடம் கேட்டேன். அவர் தரவில்லை.

எனவே ஒப்பந்தத்தை மீறியதாகவும், மீதித் தொகையான 34 லட்சத்து 75 ஆயிரத்தை கேட்டு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். அது இன்னமும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சிலம்பரசன் நடித்துள்ள சிலம்பாட்டம் படத்தின் சென்னை உரிமையை டி.ராஜேந்தரின் சிம்பு சினி ஆர்ட்ஸ் வாங்கியுள்ளது.

எனக்கு சேர வேண்டிய தொகையை செலுத்தாமல் இப்படத்தை சென்னையில் ரிலீஸ் செய்யக்கூடாது. அதற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைக்காலத் தடை விதிக்க மறுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதன் மூலம் சிலம்பாட்டம் படத்தை வெளியிட எந்தவித சிக்கலும் இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X