twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி உடல்நிலை: ஹீமோகுளோபின் அளவிலும் முன்னேற்றம்! - மருத்துவர்கள்

    By Shankar
    |

    Rajinikanth
    சென்னை: சுவாச கோளாறு மற்றும் இரைப்பை அழற்சியை சரிசெய்ய தேவையான-முழுமையான சிகிச்சைகள் இப்போது ரஜினிகாந்துக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது உடல்நிலை சீராக உள்ளது. ஹீமோகுளோபின் அளவிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது," என்று ராமச்சந்திரா மருத்துவமனை டாக்டர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சுவாச கோளாறு மற்றும் இரைப்பை அழற்சி காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகிறார் ரஜினி.

    அவருடைய உடல்நிலை பற்றி ஒரு நாளைக்கு இருமுறை மருத்துவமனை நிர்வாகமும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் மருத்துவ அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

    டாக்டர்கள் குழு வெளியிட்ட நேற்றைய செய்திக் குறிப்பு:

    "பிரபல திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் கடந்த 13-ந் தேதி மாலை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்டுள்ள சுவாச குழாய் தொற்று மற்றும் குடல் நோய்க்காக உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, டாக்டர்கள் குழு தேவையான-முழுமையான சிகிச்சை அளித்தார்கள்.

    அவருடைய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு சீராக இருக்கிறது. அவர் குடும்ப உறுப்பினர்களுடன் உற்சாகமாக நேரத்தை செலவிட்டு வருகிறார்.''

    இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    எப்போது வீடு திரும்புவார்?

    ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு, 'ஹீமோகுளோபின்' அளவு குறைவாக இருந்தது என்றும், சிகிச்சைக்குப்பின், அவருக்கு 'ஹீமோகுளோபின்' அளவு அதிகரித்திருப்பதாகவும், எனவே இன்னும் சில நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்றும் சிகிச்சை அளிக்கும் டாக்டர் தெரிவித்தார்.

    English summary
    Ramachandra hospital doctors told that Rajinikanth's health is recovering fast and he is spending his time with his family in the private ward.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X