'புரட்சிக் கவிஞர்' ரஜினிகாந்த்!

1996-ம் ஆண்டு ரகுராம் வங்க மொழியில் இயக்கிய படம் பாக்ய தேவ்தா. இதில் புரட்சிக் கவிஞர் வேடத்தில் நடித்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இப்போது இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யும் திட்டத்தில் உள்ளார் ரகுராம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தசாவதாரத்தில் சில காட்சிகளில் கமலுடன் நடித்தேன். ஏற்கெனவே அவ்வை சண்முகியில் சில காட்சிகளில் நடித்திருந்தேன். அவர் நடிப்பில் உலக நாயகன். அவரோடு சேர்த்து என்னையும் பிரபலமாக்கி விட்டார்.
இப்போது ஆனந்த தாண்டவம் படத்தில் நடிக்கிறேன்.
நடன இயக்கத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டேன். அந்த வேலையை இனி என் மகள் காயத்ரி பார்த்துக் கொள்வாள். இனி நடிப்புதான். அத்துடன் என்னுடைய நீண்ட நாள் கனவான பாக்ய தேவதா தமிழ் படத்தையும் இயக்கப் போகிறேன்.
இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் அதாவது புரட்சிக் கவிஞராக நடிக்கிறார் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இந்த யோசனையை என்னிடம் தெரிவித்தவரே ரஜினிதான், என்றார்.


Click it and Unblock the Notifications











