சத்தியநாராயணா ஓய்வு: இனி ரஜினியின் நிர்வாகம்!-சுதாகர் பேட்டி

By Staff

Sathyanarayana
அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்தியநாராயணாவை ரஜினி நீக்கிவிட்டதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை என்றும், அவருக்கு தற்காலிக ஓய்வு அளிக்கப்பட்டிருப்பதாகவும், இனி மன்ற நடவடிக்கைகளை ரஜினியே நேரடியாகக் கவனிப்பார் என்றும் ரஜினி ரசிகர் மன்ற புதிய நிர்வாகி சுதாகர் நேற்று அறிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள விளக்க அறிக்கை:

சமீபத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை, ராகவேந்திரா மண்டபத்தில் நேரில் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார் ரஜினி.

அப்போது, 'உடல்நிலை சரியில்லாததாலும், அம்மா இல்லாத நிலையில், வயதான தன் தந்தையைப் பராமரிக்க வேண்டும் என்பதாலும், அகில இந்திய ரசிகர் மன்ற பொறுப்பில் இருக்கும் சத்தியநாராயணாவை ஓய்வு எடுக்கச் சொல்லியிருக்கிறேன்' என்று ரஜினியே தெரிவித்தார்.

இனிமேல் ரசிகர் மன்ற விஷயங்களை தானே நேரடியாகக் கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் ரஜினி.

தற்போது எந்திரன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த நேரத்தில் ரசிகர் மன்ற விஷயங்களை நான் கவனித்து ரஜினியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதில் எனக்கு உதவியாக இரு பணியாளர்களையும் அமர்த்தியுள்ளார். தினசரி மன்றத்துக்கு வரும் செய்திகளை அவர்கள் குறித்து வைத்துக் கொள்வார்கள். பின்னர் அவற்றை நான் ரஜினியிடம் சேர்ப்பேன்.

எனவே, சில பத்திரிகைகளில் வெளியான செய்தியைப் போல், சத்தியநாராயணா நீக்கம் இல்லை. அவரை தற்காலிகமாக ஓய்வு எடுக்குமாறு ரஜினி கேட்டுக்கொண்டார். அவரது நலனில் அக்கறை கொண்டு ரஜினி எடுத்திருக்கும் முடிவு இது. தயவு செய்து கற்பனைகளைச் செய்தியாக்க வேண்டாம் என்று மீடியா நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X