நடிகர் சங்க நாடகம் - சிவாஜி கேரக்டரில் சரத்

நடிகர் சங்கம் சார்பில் நாடக விழா நடைபெறுகிறது. அதில் ஒரு பகுதியாக சிவாஜியின் ஞான ஒளி படத்தை நாடகமாக்குகிறார் ஒய்.ஜி. மகேந்திரா. ஏற்கனவே இவர் சமீபத்தில் வியட்நாம் வீடு நாடகத்தை ரீ கிரியேட் செய்து அரங்கேற்றினார். சிவாஜி வேடத்தில் மகேந்திராவே நடித்தார்.
இந்த நிலையில் ஞான ஒளி படத்தின் நாடக வடிவில், சிவாஜி கேரக்டரில் சரத்குமார் நடிக்கவுள்ளாராம்.
இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், மீண்டும் நாடகத்துக்கு புத்துயிர் ஊட்டவேண்டிய காலம் வந்திருக்கிறது. இந்த விழாவில் ஒரு நாடகத்தில் நடிக்கிறேன்.
அதோடு விட்டுவிடாமல் சிவாஜியின் ஞானஒளியை நாடகமாக ஒய்.ஜி.மகேந்திரன் மாற்றி வருகிறார். அதில் சிவாஜி நடித்த கேரக்டரில் நடிக்க இருக்கிறேன். சிவாஜி கேரக்டர் என்பதால் பயத்துடனும், கவனத்துடன் நடிக்க தயார்படுத்தி வருகிறேன் என்றார்.
Comments
சரத்குமார் சினிமா சிவாஜி கணேசன் ஞான ஒளி தமிழ் நடிகர் சங்கம் நாடக விழா cinema gnana oli nadigar sangam sarath kumar shivaji ganesan stage festival


Click it and Unblock the Notifications