கமல் ஹாசன் படத்துக்கு இசை சங்கர் மகாதேவன்!

கமல்ஹாஸன் நடிக்கும் புதிய படத்தை செல்வராகவன் விரைவில் இயக்குகிறார். பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ள நிலையில் ஒரு திடீர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
படத்துக்கு யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இப்போது யுவனுக்கு பதில் பின்னணிப் பாடகரும், இந்தியில் முன்னணி இசையமைப்பாளராகத் திகழ்பவருமான சங்கர் மகாதேவன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சங்கர் - எஷான் - லாய் எனும் பெயரில் சங்கர் மகாதேவனும் அவரது நண்பர்களும் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.
கமல் நடித்த ஆளவந்தான் படத்துக்கு இசையமைத்தவர்கள் சங்கர் எஷான் லாய்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாகத் தயாராகும் படம் இது.


Click it and Unblock the Notifications











