தனுஷ் கதையில் சிம்பு!

பொல்லாதவன் வெற்றியைத் தொடர்ந்து தனுஷை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க முடிவு செய்தார் வெற்றிமாறன். தனுஷும் கண்டிப்பாக நடித்துக் கொடுப்பதாக உறுதியளித்திருந்தார். இதையடுத்து தனுஷுக்காக ஒரு கதையை ரெடி செய்தார் வெற்றி மாறன்.
மே மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் வெற்றிமாறன் அறிவித்திருந்தார். ஆனால் விஜயா கம்பைன்ஸ், ஜெமினி லேப்ஸ் மற்றும் சொந்தப் படம் ஆகியவற்றில் பிசியாக இருப்பதால் தனுஷுக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது.
இதையடுத்து தன்னால் தேதி கொடுக்க முடியாத நிலை இருப்பதாக வெற்றிமாறனிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து தற்போது தனுஷுக்குப் பதில் சிம்புவை நடிக்க தீர்மானித்துள்ளாராம் வெற்றிமாறன். ஆனால் கதை அதே கதைதானாம். இருப்பினும் சிம்வுக்காக சில மாற்றங்கள் செய்யப்படுமாம்.
சிம்புவும் கதையைக் கேட்டவுடன் சந்தோஷமாகி தேதி கொடுக்க சம்மதித்து விட்டாராம்.


Click it and Unblock the Notifications











