வயாகரா..நயாகரா..சிம்பு பாட்டு!

தனது படங்களில் அவ்வப்போது ஒரு பாடலைப் பாடி விடுவது சிம்புவின் வழக்கம். இப்போது வெளிப் படங்களுக்கும் பாட ஆரம்பித்துள்ளார்.
தற்போது ஸ்ரீகாந்த் தேவா மற்றும் சபேஷ் முரளி இசையில் இரு படங்களில் இரு பாடல்களைப் பாடியுள்ளார் சிம்பு.
இதில் ஒரு படம் முரட்டுக்காளை. சுந்தர்.சி, சினேகா இணைந்து நடிக்கும் ரீமேக் படம். இதில் சுந்தர புருஷா, சுந்தர புருஷா என்று ஆரம்பிக்கும் பாடலைப் பாடியுள்ளாராம் சிம்பு. சுந்தர்.சிக்கு குரல் கொடுத்துள்ளார் இந்தப் பாடலில்.
சிம்புவுடன் இணைந்து பாடியுள்ளவர் அனுராதா ஸ்ரீராம். அவர் புன்னகை அரசி புன்னகை அரசி என்று பாடுவாராம். சினேகாவுக்கு குரல் கொடுத்துள்ளார் அனுராதா.இந்தப் பாடலுக்கு இசையமைப்பு ஸ்ரீகாந்த் தேவா.
குற்றாலத்தில் வைத்து இந்தப் பாடலை படமாக்கியுள்ளனர்.
அதேபோல முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் வைகை படத்தில் சபேஷ் முரளி இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார். நான் உனக்கு வயாகரா, நீ எனக்கு நயாகாரா (அப்டீன்னா...) என்றா பாடல்தான் அது.
இந்தப் பாட்டுக்கு பாலாவும், ரகசியாவும் இணைந்து ஆடினராம். ரகசியாவின் ஆட்டத்தில் கிளாமர் தூக்கலாக இருக்குமாம்.


Click it and Unblock the Notifications











