ரஜினிக்கு 60ம் கல்யாணம்!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் 60 வது பிறந்த நாள் நெருங்கிவிட்டது. அவரது ரசிகர்கள் தங்கள் மனதுக்கும், சுற்றியிருப்போர் நலனுக்கும் ஏற்ப அதைக் கொண்டாடத் திட்டமிட்டு வருகிறார்கள்.
முந்தைய ஆண்டுகளைப் போல அல்லாமல், தமிழகம் முழுக்க வெகு விமர்சையாக இந்த நாளைக் கொண்டாட ரசிகர்கள் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இது ரஜினியின் மணி விழா ஆண்டு என்பதால், அவருக்கு அறுபதாம் கல்யாணம் செய்து பார்க்க அவரது வாரிசுகள் ஆசைப்பட, அதற்கு முழு ஒப்புதல் தந்துள்ளார் ரஜினி என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
தஞ்சையில் 60-ம் கல்யாணத்துக்கென்றே புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமி திருக்கோயிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும் என்றும் ரஜினி ரசிகர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Comments
60 ஆம் கல்யாணம் 60th birthday ஐஸ்வர்யா சௌந்தர்யா திருக்கடையூர் ரஜினி லதா fans latha rajini soundarya


Click it and Unblock the Notifications