பாரதிராஜா படத்தில் தனுஷ்?

இதுவரை பாலுமகேந்திரா என்ற மிகப் பெரிய இயக்குநர் படத்தில் மட்டுமே நடித்துள்ளார் தனுஷ். மற்ற படங்கள் அனைத்தும் இக்காலத்து இயக்குநர்கள்தான்.
இந்த நிலையில் சமீபத்தில் திடீரென அவரை தனதுஅலுவலகத்திற்கு வரவழைத்துக் கதை சொன்னாராம் பாரதிராஜா. இந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து தனுஷ் இன்னும் மீளவில்லை.
சாதாரண இளம் நடிகரான தன்னை மதித்து, கதை சொன்ன பாரதிராஜாவின் குணம், தனுஷைக் கவர்ந்து விட்டதாம். அத்தோடு பாரதி ராஜா சொன்ன கதையும்ப் பிடித்துப் போய் விட்டதாம். நிச்சயம் நடிக்கிறேன் என்று கூறி விட்டு வந்திருக்கிறாராம்.
இந்த விஷயத்தை மாமனார் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் சொன்னாராம். அவரும் வாழ்த்தி அரிய வாய்ப்பு, தவற விட்டுடாதீங்க என்று அட்வைஸ் செய்து தட்டிக் கொடுத்தாராம்.
அப்ப சீக்கிரமே ஒரு 'சப்பாணி'யைப் பார்க்கலாம் - மறுபடியும்!
Comments


Click it and Unblock the Notifications