3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிப்பார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த நிலையில் இந்தப் படத்தின் உரிமையை விஜய் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. விஷ்ணுவர்தனை வைத்து இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் 3 இடியட்ஸ் மூன்று ஹீரோக்கள் நடித்துள்ளனர். அதுபோல தமிழில் விஜய் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் விஜய்யே மிகுந்த ஆர்வத்துடன் இதற்கு ஒப்புக் கொண்டாராம்.
இந்தியில் நடித்த மாதவன் அதே கேரக்டரிலும், இன்னொரு வேடத்தில் விஜய்யின் நட்பு வட்டத்துக்குள் உள்ள சூர்யாவையும் நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம். அமீர்கான் வேடத்தில் விஜய் நடிப்பாராம்.
இதுகுறித்து முழு தகவல்களும் விரைவில் வெளியாகும் என்று விஜய் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.
ஏற்கெனவே சோட்டா மும்பை படத்தின் ரீமேக்கான சுறா படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்த படமாக மலையாளத்தில் வெளியான பாடிகார்டை ரீமேக் செய்கிறாராம். அதற்கடுத்த படமாக 3 இடியட்ஸ் ரீமேக் வரும் என்கிறார்ர்கள்.


Click it and Unblock the Notifications











