மீண்டும் சைஸ் ஜீரோவுக்கு போகும் கரீனா

பாலிவுட்டிலேயே மிகச் சிறந்த ஒல்லிக்குச்சி நடிகையாக அறியப்பட்டவர் கரீனா கபூர். சைஸ் ஜீரோ என்று இதற்கு பெயர் வைத்துள்ளனர். முதல் முறையாக சைஸ் ஜீரோ ரேஞ்சை எட்டியவர் கரீனா என்றும் பாலிவுட்டில் கூறப்படுவதுண்டு.
ஆனால் தற்போது லேசாக பெருத்து விட்டாராம் கரீனா கபூர். இதனால் மீண்டும் சைஸ் ஜீரோ ரேஞ்சுக்குப் போகப் போகிறாராம். உடல் லேசாக பெருத்தது மட்டும் இதற்குக் காரணமல்ல, பாலிவுட்டின் சென்சேஷனல் ஹீரோ இம்ரான் கானுடன் இணைந்து நடிக்கப் போவதால் அவர் ரேஞ்சுக்கு தனது வயதைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்த அக்கறையாம்.
கரன் ஜோஹர் அடுத்து இயக்கும் ஷார்ட் டெர்ம் சாதி என்ற படத்தில்தான் இம்ரானுடன் இணைகிறார் கரீனா. இப்படம் காமரூன் டயஸ், அஷ்டன் கட்சர் நடித்த வாட் ஹேப்பன்ட் இன் வேகாஸ் என்ற படத்தின் தழுவலாக கூறப்படுகிறது.
நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறதாம். இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னை டிரிம்மாக்கிக் கொண்டு கன கச்சிதமாக மாற முடிவெடுத்துள்ளார் கரீனா.
சமீபத்தில்தான் தனது காதலர் சைப் அலிகானின் அறிவுரையைக் கேட்டு உடம்பைப் பெருக்க வைக்க ஆரம்பித்திருந்தார் கரீனா. ஒல்லிக்குச்சியாக பார்த்து போரடித்து விட்டதாக அவர் சலித்துக் கொண்டதால் வாய் நிறைய சாப்பிட ஆரம்பித்திருந்தார். ஆனால் இப்போது மீண்டும் சைஸ் ஜீரோவுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் வந்து விட்டது.


Click it and Unblock the Notifications











