இங்கிலாந்து கார் ரேஸ் – அஜீத்துக்கு 18வது இடம்

By Sudha

Ajith
சில்வர்ஸ்டோன்: இங்கிலாந்தில் நடந்த கார் பந்தயத்தில் நடிகர் அஜீத் குமாருக்கு 18வது இடம் கிடைத்துள்ளது.

அசல் படம் முடிந்த கையோடு, பெப்ஸி விழாவில் பேசி பிரச்சினைக்குள்ளான அஜீத், தனது 50 வது பட வேலைகளை ஒத்தி வைத்துவிட்டு கார் ரேஸ்களில் பங்கேற்று வருகிறார்.

இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோனில் நடந்த பார்முலா 2 பந்தயத்தில் பங்கேற்ற அஜீத், ஆரம்ப கட்டப் போட்டிகளில் கடைசி இடத்திலேயே வந்தார். மொத்தம் 23 பேர் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். அஜீத் 22 அல்லது 23 வது இடத்திலேயே மாறி மாறி வந்து கொண்டிருந்தார்.

ஆனால் நேற்று நடந்த போட்டிகளில் அஜீத்திடம் முன்னேற்றம் காணப்பட்டது. அவர் 18வது இடத்தைப் பிடித்தார்.

அஜீத் பங்கேற்கும் முதல் பார்முலா 2 பந்தயம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் பங்கேற்ற மற்ற வீரர்கள் பல களங்களைக் கண்டவர்கள். தனது முதல் போட்டியிலேயே, தொழில்முறை வீரர்களுடன் போட்டியிட்டு 18வது இடத்தைப் பிடித்துள்ள அஜீத்தை மற்ற இந்திய வீரர்களான இப்ராகிம், சுரேஷ்வரன் ஆகியோர் பாராட்டினர்.

இதுகுறித்து அஜீத் கூறுகையில், "இந்தப் போட்டியைப் பொறுத்தவரை வெற்றி முக்கியமல்ல.. பங்கேற்புதான் முக்கியம். முதல்முறையாக நான் பங்கேற்று 18 வது இடத்தைப் பிடித்துள்ளேன். முதல் போட்டியில் இதுவே பெரிய விஷயம்தான். அடுத்த போட்டியில் இன்னும் போட்டியை ஏற்படுத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

அவருடன் பங்கேற்ற பிற இந்திய வீரர்களான இப்ராகிம் 8வது இடம் பிடித்தார். சுரேஷ்வரனுக்கு 16வது இடம் கிடைத்தது.

மொராக்கோவில் நடக்கும் ரேஸிலும் அஜீத் பங்கேற்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X