'தல' தீபாவளி விருந்து ஏகன்!

வருகிற செப்டம்பர் 30-ம் தேதி படத்தின் ஆடியோவை வெளியிட்டுவிடும் திட்டத்தில் உள்ளது அய்ங்கரன்.
ராஜூ சுந்தரம் இயக்கும் முதல் படமான ஏகனுக்காக மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம் அஜீத். ஹாலிவுட் பாணியில் மிரட்டலாக அமைந்துள்ளன காட்சிகள் என அஜீத்தே மனம் விட்டுப் பாராட்டினாராம் இயக்குநரை, ரஷ் பார்த்துவிட்டு.
முதலில் நவம்பர் இரண்டாம் வாரத்தில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தீபாவளி சமயத்தில் ரிலீஸ் செய்வது அஜீத்துக்கு செண்டிமெண்டாக ஒர்க் அவுட் ஆகும் என கேள்விப்பட்டு, முன்கூட்டியே ரிலீஸ் செய்கிறார்கள்.
அறிந்தும் அறியாமலும் நவ்தீப் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சுஹாசினி, நாசர் ஆகியோரும் படத்தில் உண்டு.
நயன்தாரா, பியா இருவரும் அஜீத்தின் ஜோடிகளாக வருகின்றனர்.
ஷாரூக்கான் நடித்து சக்கை போடு போட்ட ஹிந்திப் படமான மெய்ன் ஹூன் நா வின் ரீமேக் இது என்கிறார்கள்.
ஷாரூக் பெற்ற அதே வெற்றியை தங்கள் 'தல'யும் பெறுவார் என அடித்துச் சொல்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
படத்தின் ஆடியோ வெளியீடு வரும் செப்டம் 30-ம் தேதி சென்னையில் நடக்கிறது.


Click it and Unblock the Notifications











