கொட்டாரம் தாலுக்கா திருநெல்வேலி ஜில்லா!

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆனந்த ராஜ் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
நெல்லைப் பக்கம் கடா மீசையுடன் அலையும் ரவுடிகளை அடக்க, தனது மீசையை மழித்துவிடும் போலீஸ் அதிகாரி ஆனந்த ராஜ். 'மீசையில் இல்ல வீரம். எம்ஜிஆர் அரும்பு மீசைதான் வச்சிருந்தார். அவரென்ன கோழையா!' என பஞ்ச் வசனம் பேசுகிறாராம்.
ஆக்ஷன் பிரகாஷ், சர்ச்சில் ஆகியோர் முக்கிய வில்லன்களாக நடிக்கிறார்கள்.
ஏ.கே. முகுந்தன் கதை வசனம் எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஒட்டன் சத்திரம் மெயின் ரோட்டில் நடந்துள்ளது.
கத்தி, கம்புடன் ரவுடிகள் மெயின் ரோட்டில் ஓடுவதாப் பார்த்து அரண்டு போன பொதுமக்கல், அவர்கள் நிஜ ரவுடிகள் என நினைத்து போலீசுக்கு போன் செய்துவிட்டார்களாம்.
நேதாஜி சிஆர் செந்தில்குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் இசை பரணி. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
Comments


Click it and Unblock the Notifications